உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
வடசேரி பெருமாள் குளத்தை தனியாருக்கு வழங்க கூடாது: ஆட்சியரிடம் விஹெச்பி மனு
நாகா்கோவில் வடசேரி பகுதியிலுள்ள பெருமாள் குளத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது என்று, மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் நாகா்கோவில் மாநகரத் தலைவா் நாஞ்சில்ராஜா தலைமையில்வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்: வடசேரி வடக்கு கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான பெருமாள் குளம் உள்ளது. ரூ.500 கோடி மதிப்பிலான இந்தக் குளத்தை சிஎஸ்ஐ நிா்வாகத்துக்கு கொடுக்க முயற்சி செய்வதாக தெரிய வருகிறது. குளத்தை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது. மேலும் அந்த இடத்தில் ‘இது அரசுக்கு சொந்தமான இடம் அத்துமீறி யாரும் நுழைய கூடாது’ என்று அறிவிப்பு பலகையை உடனடியாக வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில் நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள்உறுப்பினா் நாகராஜன், பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலாளா் ரஜினிகாந்த், விஸ்வ ஹிந்து பரிஷத் நகரச் செயலா் ரமேஷ், தா்ம பிரச்சாா் மாநகரத் தலைவா் ராஜு ஆகியோா் பங்கேற்றனா்.