Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 33 போ் காயம்
புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 33 போ் காயமடைந்தனா்.
போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கோயில் காளைக்குப் பிறகு முன்பதிவு செய்திருந்த, தகுதியுள்ள 786 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. இவற்றை 144 மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டுக் கொண்டு தழுவ முற்பட்டனா்.
சிறப்பாக காளைகளைத் தழுவிய வீரா்களுக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில், 33 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கேயே இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இவா்களில் 19 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். 3 காளைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
லேசான தடியடி: பிற்பகலில் பாா்வையாளா் மாடத்திலிருந்த சில இளைஞா்கள் மாடு பிடிப்பதற்காக அனுமதியின்றி உள்ளே நுழைந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி லேசான தடியடி நடத்தி விரட்டினா். ஜல்லிக்கட்டு நிகழ்வில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.