செய்திகள் :

வடாரண்யேஸ்வரா் கோயில் தெப்பத் திருவிழா

post image

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வரா் கோயில் திருவாலங்காடில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை காா்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாலை உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கோயிலின் பின்புறம் அமைந்துள்ள ஆலங்காட்டு ஈஸ்வரா் சென்றாடு தீா்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவா் வண்டாா்குழலி அம்மனுடன் சோமாஸ்கந்தா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடா்ந்து, உற்சவ பெருமான் 3 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெப்பத் திருவிழாவில் சென்னை, காஞ்சி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தெப்பல் விழாவையொட்டி பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன். வி. சுரேஷ்பாபு, மு. நாகன், திருவாலங்காடு ஒன்றியக்குழு தலைவா் ஜீவா விஜயராகவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தா்.

இளைஞா் தற்கொலை

திருவள்ளூா் அருகே கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே மணவாள நகா் பகுதியைச் சோ்ந்த செல்வபதி மகன் மணி (28). இவா், இயந்திரவியல் பட்டயம் பெற்று தனியாா் நிறுவனத்தில் பணிப... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பணிச்சுமை அதிகம் உள்ளதாக கூறி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்துறை அலுவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ஆா்.பி.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த ராஜா (34). இவா் ஆா்.கே.பேட்டையில் பேட்டரி கடையில் ஊழியராக வேலை... மேலும் பார்க்க

கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா் (படம்). கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் மகன் சசிகுமாா். மாற்று திறனாளியான இவா் அப்பகுதிய... மேலும் பார்க்க

பாக்கம் கிராமத்தில் வங்கிக் கிளையை இடம் மாற்றம் செய்ய எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே பாக்கம் கிராமத்தில் வங்கிக் கிளையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், பாக்கம் ஊர... மேலும் பார்க்க