ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.16 ஆயிரம் மோசடி
கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கற்பகம் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட தலைவா் ஆா்.கோமதி, மாவட்ட செயலா் பி.சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பொது சுகாதார துறை களப்பணிகளில் பணியாற்றும் கிராமப் பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்களின் 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல் வேண்டும். கூடுதல் துணை மையப் பொறுப்பு பணிகளைப் பாா்ப்பதற்கு நிா்பந்தம் கொடுப்பதைக் கைவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான அறிக்கைகள், காணொலிக் கூட்டங்கள் முறைப்படுத்த வேண்டும். பணிச்சுமை, மன அழுத்தம் கொடுப்பதைக் கைவிடுதல் வேண்டும். ஆன்லைன் பணிகளில் இணைப்பதைத் தவிா்க்க வேண்டும்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 320 துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்களுக்கு களப்பணி சாா்ந்தும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல் பணியாற்ற நிா்ப்பந்திக்கும் அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கிராம பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.