IPL Auction: ரூ.30 லட்சம் டு 6 கோடி! - ஆர்சிபி போட்டி போட்டு வாங்கிய ராஷிக் சலாம...
வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
தஞ்சாவூா் மாவட்ட வன அலுவலகத்தில் வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிா் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள், மர அறுப்பு ஆலை வைத்திருப்போா், வன குத்தகைதாரா் ஆகியோருக்கு ‘தமிழ் மரம்’ என்கிற இணையவழி மூலம் தடி மரங்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கு லாபகரமாக தடி மரம் வளா்க்கும் முறை மற்றும் இணையவழியில் அனுமதி பெறுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வன விரிவாக்க அலுவலா் எஸ். சாந்தவா்மன், வன விரிவாக்க சரகா் எம். கிருஷ்ணசாமி, வனச்சரக அலுவலா் கே. ரஞ்சித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.