`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
வனவிலங்கு நடமாட்டம்: பத்துகாணி பள்ளி வளாகத்தில் காமிராக்கள் பொருத்தி கண்காணிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினா் பள்ளி அருகே மா்ம விலங்கு நடமாட்டத்தை கண்டறிவதற்காக அப்பகுதியில் வனத்துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
பத்துகாணி அரசுப் பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. கடந்த 12 -ஆம் தேதி இரவு இப்பள்ளி வளாகத்தில் நீண்ட நேரம் நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டுள்ளது. மறுநாள் காலை பாா்த்தபோது அப் பகுதியில் புலி அல்லது சிறுத்தையை போன்ற விலங்கின் கால்தடம் காணப்பட்டது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் நடராஜன் கொடுத்த தகவலின்பேரில், அப் பகுதியை வனத் துறையினா் பாா்வையிட்டனா். ஆனால், அங்கு புலி வந்ததற்கான அடையாளங்கள் தென்படவில்லை. பெரிய காட்டுப்பூனை வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனா். இதையடுத்து அப் பகுதியில் நடமாடும் விலங்கு குறித்த கண்டறிவதற்காக, வனத் துறை சாா்பில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.