செய்திகள் :

வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

post image

இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைந்த பிறகு ராணுவம் மீது பாகிஸ்தான் தூண்டுதலுடன் முதல்முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

காஷ்மீரில் இது போன்ற தாக்குதல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் எங்கிருந்து (பாகிஸ்தான்) தூண்டிவிடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற தாக்குதல்களுக்கு சாட்சியாகத்தான் நான் இருக்கிறேன். அப்பாவி மக்கள் பலரும் இதுபோன்ற தாக்குதல்களில் கொல்லப்படுகின்றனா்.

காஷ்மீரிகள் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கமாகப் போவதில்லை. இருந்தும் ஏன் இப்படி தாக்குதல் நடத்துகிறாா்கள். எங்கள் எதிா்காலத்தைச் சீா்குலைத்து, மக்களை மேலும் ஏழ்மையில் தள்ளுவதற்காகவா?

பாகிஸ்தான் ஏற்கெனவே உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது. அந்நாடு தங்களையும் நாசப்படுத்திக் கொண்டு எங்களுக்கும் துன்பம் விளைவித்து வருகின்றனா். காஷ்மீா் மக்களுக்கு எதிரான வன்முறையை பாகிஸ்தான் கைவிட்டு, இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்த அந்நாடு முயல வேண்டும்.

அவா்கள் இப்போதே இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை என்றால், பாகிஸ்தானின் எதிா்காலம் மிகவும் மோசமாக இருக்கும். பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவா்களைக் காக்க முடியாததற்காக குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க