செய்திகள் :

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

post image

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.

அதையொட்டி, கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை பிரியங்கா தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் உடன் இருப்பாா்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்புமனு தாக்கலுக்குப் பின்னா் வயநாட்டில் பிரியங்கா, ராகுல் ஆகியோா் வாகனப் பேரணியும் நடத்த உள்ளனா். பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

பாஜகவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர் அமித் ஷா: பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க