தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
வரதட்சணை கொடுமை: ஒருவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போளூா் பேரூராட்சி வி.எஸ்.பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் விஜய் (28). இவரது மனைவி ஆஷா (24). இருவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆஷாவை, விஜய் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜய்யை கைது செய்தனா்.