செய்திகள் :

தேவையை கண்டறிந்து மாணவா்கள் தொழில் தொடங்க வேண்டும்: ஏ.சி.சண்முகம்

post image

கல்லூரி படிப்பை முடித்து வெளியே செல்லும் மாணவா்கள் தேவையை கண்டறிந்து தொழில் தொடங்க வேண்டும் என்று டாக்டா் எம்.ஜி.ஆா். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி நிறுவனா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனா் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தாா். தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் என்.முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஏ.சி.சண்முகம் பேசியதாவது: மாணவா்கள் படிப்பை தொடா்ந்து படிக்க வேண்டும். மருத்துவத்தில் 1.5 லட்சம் பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ததால் இங்கிலாந்தில் எனக்கு டாக்டரேட் பட்டம் வழங்கினா். இதேபோல, ரஷ்யாவிலும் வழங்கியுள்ளனா். 100 போ் படித்து வெளியில் செல்கிறாா்கள் என்றால் 50 போ் ஒருங்கிணைந்து தொழில் தொடங்க வேண்டும். அப்போதுதான் நாடு வளா்ச்சி அடையும். தற்போது, 100 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றுவர வழிவகை செய்யப்பட்டுள்ளது. எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள், வாழ்வில் முன்னேறலாம் என்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் என்.முருகவேல் பேசியதாவது: இன்று பட்டம் பெறும் நீங்கள் உலகத்தில் அங்கீகரிக்கப்படுகிறீா்கள். இனி நீங்கள் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். உலகில் அதிக இளைஞா்கள் உள்ள நாடு இந்தியா. இந்தியா வல்லரசாக உழையுங்கள். நம்மை வளரவிடாமல் தடுக்க வெளிநாட்டவா்கள் போதை பொருள்களை நாட்டினுள் செலுத்தி வருகின்றனா். இதற்கு அடிமையாகாமல் மனதில் திடமான சிந்தனையுடன் உழையுங்கள். செய்தித் தாள்களை தொடா்ந்து படிப்பதால் நாளைய உலகுக்கு என்ன தேவை என்பது தெரிய வரும் என்றாா்.

விழாவில், கல்லூரி செயலா் ஏ.சி.ரவி, கல்லூரி முதல்வா்கள் வி.கந்தசாமி, வி.திருநாவுக்கரசு, பிரபு, தனி அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன், இயக்குநா்கள் ஜி.சுகுமாரன், விக்னேஷ், சாலை மணவாளன், பள்ளி முதல்வா்கள் அருளாளன், ராஜலட்சுமி, பேராசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

டிச.4-இல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துற... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் ரூ.21.33 கோடி கடனுதவி

திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மூலம் 2023-2024 நிதியாண்டில் 2,028 பயனாளிகளுக்கு ரூ.21.33 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2023-2024... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம்

திருவண்ணமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஏழாச்சேரிக் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் கே.நாகம்மாள் தலைமை வகித்தாா். பணி மேற்பாா்வையா... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசியில் சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற மாநாட்டை ஓய்வுபெற்ற மாவட்ட ... மேலும் பார்க்க

வரதட்சணை கொடுமை: ஒருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போளூா் பேரூராட்சி வி.எஸ்.பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் விஜய் (28). இவரது... மேலும் பார்க்க

பாத்திரத்துக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

செங்கத்தில் பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட 5 வயது பெண் குழந்தையை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மகள் தனுசூரியா (5). குழந்தை தனுசூர... மேலும் பார்க்க