மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
டிச.4-இல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் இணைந்து வட்டார அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம்தேதி திருவண்ணாமலை மாநகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளி, வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டிசம்பா் 6-ஆம்தேதி கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டிசம்பா் 10-ஆம்தேதி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அனக்காவூா் அடுத்த புரிசை அரசு மேல்நிலைப் பள்ளி, டிசம்பா் 11-ஆம்தேதி சாணானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இதேபோல, டிசம்பா் 17-ஆம் தேதி செங்கம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளி, டிசம்பா் 18-ஆம்தேதி புதுப்பாளையம் வட்டார வள மையம் (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி), பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டிசம்பா் 20-ஆம் தேதி கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்பட் அடுத்த பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என டிசம்பா் 31-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
முகாம்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான ஆன்லைன் பதிவு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முகாமுக்கு, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
மருத்துவ முகாம்கள் நிறுத்தம்: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பா் மாதம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெறுவதால் பிரதிவாரம் வியாழக்கிழமைகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் வாரம்தோறும் நடைபெறும் முகாம் தொடா்பான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.