செய்திகள் :

வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!

post image

இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலக அளவில் 15 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் 16ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உலக செஸ் தரவரிசையில் 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. கிளாசிக்கல் கேமில் டிரா ஆனதால் தவறவிட்டார்.

45ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் அர்ஜுன் எரிகைசி முதல் 6 போட்டிகளில் 6-0 என வென்றதால் இந்தியா முதலிடத்தை தக்க வைக்க மிகவும் உதவியது குறிப்பிடத்தக்கது.

செஸ் உலகில் பலரும் அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முடிச்சு உட்டீங்க போங்க..! கவினை கிண்டல் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ ... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்ட அமரன்..! குவியும் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாக... மேலும் பார்க்க

55-ஆவது இந்திய திரைப்பட விழா: 25 படங்களில் ஒரே தமிழ்ப்படம்!

இந்திய திரைப்பட விழாவில் தமிழ்ப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகியுள்ளது. கோவாவில் வரும் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்க... மேலும் பார்க்க

விரைவில் கைதி - 2: லோகேஷ் கனகராஜ்!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இ... மேலும் பார்க்க

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 25 - 31) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)குடும்பத்தில... மேலும் பார்க்க

ரூ. 25,000 கடனை அடைக்கதான் நடிக்க வந்தேன்: சூர்யா

தனது அம்மாவின் ரூ. 25,000 கடனை அடைப்பதற்காகதான் முதலில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, 1997ஆம் ஆண்டு நேருக்குநேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திர... மேலும் பார்க்க