வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 55 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், பலத்த காயமடைந்த மாற்றுத்திறனாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.