வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நாகராஜ் (38). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் அரப்பபிள்ளைபட்டி மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.