KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு
பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கரில் உள்ள சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனா்.
இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இடங்களை விற்கவோ, வாங்கவோ முடியாமல் அவதிப்பட்டனா். இதைக் கண்டித்து, பல்வேறு கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மத்திய அரசு அண்மையில் வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதையடுத்து, பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கா் நிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பத்திரப் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து, பழனி பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு திரளானோா் வந்து அந்தப் பகுதி நிலங்களை தங்களது பெயரில் பத்திரப் பதிவு செய்தனா்.