"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்
"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் சொல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "செத்து போன குடும்பத்தை எல்லாம் பனையூருக்கு வர சொல்கிறார். எல்லா ஓட்டு பெட்டியையும் பனையூரில் வைத்து, அங்கு வந்து எல்லா ஓட்டையும் போடுங்கனு சொல்வாரா விஜய்?
பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு வருவார். ஆனால் பஞ்சாயத்தையே பனையூரில் வைக்கச் சொல்கிறார் விஜய். நாட்டாமையும் தாண்டிய நாட்டாமையாக இருக்கிறது.

விஜய்யை நோக்கி சில கேள்விகளை தான் கேட்டேன். உடனே எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டார்கள். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. என் நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை. ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும்." என்று பேசியிருக்கிறார் சீமான்.















