"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்
`இந்தியாவுக்காக விளையாடியது ரொம்ப பெருமையா இருக்கு' - தங்கம் வென்று சாதனை படைத்த கபடி வீரர்கள்!
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன.
இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் ஆண்கள் அணியில் இடம்பெற்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக விளையாடியிருந்தார். தங்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகா, "தமிழ்நாட்டிற்காக விளையாடிய நான், இப்போ இந்தியாவிற்காக விளையாடியிருக்கிறேன். என்னுடைய பயற்சியாளர்கள், என்னுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு அரசிற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
அபினேஷ் மோகன்தாஸ், "இந்தியாவிற்காக விளையாடியது ரொம்ப பெருமையாக இருக்கு. எனக்கு பக்க பலமாக இருந்து அனைவருக்கும் எனது நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் அபினேஷ்.




















