வாக்குப் பதிவு எந்திரங்கள் தணிக்கை
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் திங்கள்கிழமை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தணிக்கை நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் காலாண்டு தணிக்கை, தேனி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தோ்தல் பிரிவு வட்டாட்சியா் செந்தில்குமாா் உடனிருந்தாா்.