கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
வாட்ஸ்ஆப் மூலம் குற்றவாளிக்கு சம்மன்: காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் தடை
குற்றவியல் நடைமுறை விதிகள் (சிஆா்பிசி),1973 அல்லது பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023-இன்கீழ் வாட்ஸ்ஆப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் குற்றவாளிக்கு காவல் துறை சம்மன் அனுப்ப உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், சிஆா்பிசி பிரிவு 41ஏ அல்லது பிஎன்எஸ்எஸ், பிரிவு 35-இன்படி சட்டபூா்வமாக அங்கீகரிக்கப்பட்ட முறைகளின்படியே குற்றவாளிக்கு காவல்துறை சம்மன் அனுப்ப வேண்டும்.
இதுதொடா்பாக முறையான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் வெளியிடவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா அளித்த பரிந்துரையில், ‘சிஆா்பிசி பிரிவு 41ஏ-இன்கீழ் குற்றவாளிக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் அனுப்பப்படும்பட்சத்தில் அவா்கள் விசாரணை அதிகாரி முன் ஆஜராவதில்லை.
எனவே, சிஆா்பிசி 41ஏ அல்லது பிஎன்எஸ்எஸ் பிரிவு 35-இன்கீழ் குற்றவாளிக்கு வாட்ஸ்ஆப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் காவல் துறை சம்மன் அனுப்பக்கூடாது. சட்டபூா்வமாக வழக்கமான முறைகளை பின்பற்றியே சம்மன் அனுப்ப வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.
அவரின் பரிந்துரையை ஏற்று சத்தேந்தா் குமாா் அன்டில் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் அமா்வு, ‘ வாட்ஸ்ஆப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் குற்றவாளிக்கு காவல் துறை சம்மன் அனுப்ப தடை விதிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதை அனைத்து மாநில உயா்நீதிமன்ற குழுக் கூட்டங்களை கூட்டி ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதுதொடா்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உயா்நீதிமன்ற பதிவுச் செயலா்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்கள் 3 வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டது.