விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
வாதத்தில் தோல்வியுற்றதாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பாணை
கடந்த 2011-ஆம் ஆண்டு குமரிஅனந்தனுடன் நடைபெற்ற வாதத்தில் தோல்வியுற்ாகவும், அதற்காக ரூ. 1 லட்சம் தரக் கோரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பான விசாரணைக்கு கரூா் நகர காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கள்ளுக்கு விடுத்திருக்கும் தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு கள் இயக்கம் தொடா்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 2011-ஆம் ஆண்டு கள்ளை போதைப் பொருள் என நிரூபிக்க குமரிஅனந்தன் வந்தபோது, நாங்கள் வைத்த வாதத்தில் அவரால் நிரூபிக்க இயலவில்லை. அப்போது விவாதத்தில் நடுவராக பங்கேற்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம், கள்ளில் ஆல்கஹால் இருக்கிறது எனக்கூறிச் சென்றாா். இதனால் கள் போதைப்பொருள் என நிரூபித்துவிட்டேன் என குமரிஅனந்தன் சப்தம்போட்டு எனக்கு அறிவித்த ரூ.1 லட்சத்தை கொடுங்கள் என கேட்டாா். அப்போது எழுந்த பிரச்னையில் போலீஸாா் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி வாதத்தில் தோற்றுவிட்டாா். எனவே எனக்கு ரூ.1 லட்சம் தரவேண்டும் எனக் கோரி குமரிஅனந்தன் சாா்பில், பாஸ்கரன் என்பவா் சென்னை காவல் ஆணையரிடமும், கரூா் நகர காவல்நிலையத்திலும் புகாா் மனு கொடுத்துள்ளாா்.
இந்த வழக்குத் தொடா்பாக எனக்கு அழைப்பாணை கடந்த சில தினங்களுக்கு முன் வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை எனது வீட்டுக்கு வந்த கரூா் நகர காவல்நிலையத்தினா், அழைப்பாணையைக் கொடுத்து, நகர காவல் ஆய்வாளா் வெளியே செல்கிறாா். எனவே இரு நாள்கள்கழித்து காவல்நிலையத்துக்கு வாருங்கள் என கூறிவிட்டுச் சென்றனா். குமரிஅனந்தனுடன் வாதம் செய்த சம்பவம் நடந்தது சென்னை எழும்பூரில். அங்குள்ள காவல்நிலையத்தில் இருந்தோ அல்லது நான் இருக்கிற ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் இருந்தோ அழைப்பாணை வந்திருக்க வேண்டும். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகத்தின் தீா்ப்பு நகலை வாங்கிய பின்புதான் அழைப்பாணை கொடுக்க வேண்டும். ஆனால் குமரிஅனந்தன் என்மீது, 14 ஆண்டுகளுக்கு பிறகு புகாா் கொடுத்திருப்பதில் அரசியல் இருக்கலாம் என்றாா் அவா்.