Allu Arjun: "அல்லு அர்ஜுன் செய்தது மனிதமற்றச் செயல்; இனி அதிரடி நடவடிக்கைதான்"-த...
வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசு
வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீட்டுக்கான தொகுதிகளை முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முனியன் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
வழக்கின் விசாரணையில் தமிழக அரசு தரப்பில், 'வார்டு மறு வரையறை மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இதையும் படிக்க | 'பாஜகவின் பசப்பு அரசியல்' - முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டம்!
வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அரசின் உத்தரவாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.