செய்திகள் :

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

post image

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மதிப்புடன் இருப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

விவசாயிகளுக்கு குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள் சிலருக்குப் பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள்.

பெண்கள் கணவரிடம் உடல்நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் அறிவுரைகளை அளிப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிச்சயமாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவுவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் கணவர், அவரது குடும்பத்தாரை அனுசரித்து நடப்பீர்கள்.

மாணவர்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 13.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறப்பாக அமையும். தந்தையின் ஆரோக்கியம் கவனிக்க வேண்டி வரும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். பிறருக்கு பணம்

வாங்கித் தருவதில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கடினமாக உழைப்பீர்கள்.

விவசாயிகளுக்குப் புதிய பயிர்களால் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் மோதல், வாக்குவாதம் தவிர்க்கவும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 14, 15, 16.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கடினமான பணிகளையும் முடிப்பீர்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகளில் சிறு தடை தோன்றி மறையும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 17, 18.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்களைச் சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். நெருக்கடிகள் குறையும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும். வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரியும் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினர் கலைப்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் சோம்பேறித் தனத்தைக் கைவிடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - ஜூன் 19.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உடனிருப்போரால் ஆதாயம் பிறக்கும். குழந்தைகளின் மேற்படிப்புக்கான எண்ணங்கள் மேலோங்கும். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளின் முடிவுகள் சரியாக இருக்கும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் முன்னுரிமை பெறுவீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

புதிய ஆசைகள் துளிர்க்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர்கள் வருகையால் உற்சாகம் பெருகும். மறைமுக விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் துணிச்சலுடன் காரியமாற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளை கவனத்துடன் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை செலவுகள் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் விடாமுயற்சிகள் கைகொடுக்கும். பெண்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். வழக்குகளில் திருப்பங்களில் திருப்பங்கள் உண்டாகும். சொத்துகளில் வில்லங்கம் நீங்கும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் புகழ் பெறுவீர்கள். வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்த லாபம் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும். மாணவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சுபகாரியப் பேச்சு சாதகமாக முடியும். சந்தோஷமான சூழலை எதிர்கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு. வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்படுவீர்கள். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள்.

மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது காரியங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் இருக்காது. வியாபாரிகள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் வருவாய் ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். கலைத் துறையினர் கடன் பிரச்னைகளில் விடுபடுவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். தொழிலில் அலைச்சல் ஏற்பட்டாலும் பயன் கிடைக்கும். பொருளாதார நிலை சீராகவே இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் முயற்சிகளில் ஆதரவு உண்டு. வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள். பெண்கள் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மனம் விட்டு பேசி பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். சிக்கனமாகச் செயல்பட்டு சேமிப்பை உயர்த்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகள் தேடி வரும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் அனுகூலத்தைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கைதி - 2 படத்தில் அனுஷ்கா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி - 2 படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெ... மேலும் பார்க்க

லவ் யூ தலைவா..! ரஜினியிடம் வாழ்த்து பெற்ற டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர்!

டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபே... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: முதல் போட்டி டிரா!

அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கிளப் உலகக் கோப்பை போட்டி சமனில் முடிந்தது. இன்டர் மியாமி அணியும் அல்-அஹ்லி அணியும் முதல் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் போட்டியை முடித்த... மேலும் பார்க்க

பிரபாஸ் படத்தில் 3 நாயகிகள்: தி ராஜாசாப் டீசர் முன்னோட்டம்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய 3 நாயகிகள் இருப்பது டீசரின் முன்னோட்டத்தில் இரு... மேலும் பார்க்க

மீண்டும் சென்சார் செய்யப்பட்ட குபேரா... ஏன்?

நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதா... மேலும் பார்க்க

கைவிடப்படும் மார்கோ - 2!

உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாக இருந்த மார்கோ இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக அறிவிப்பு.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடித்த மார்கோ திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 20 தேத... மேலும் பார்க்க