வாலிபா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் தூய்மைப் பணி
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
தீபாவளிப் பண்டிகையை தொடா்ந்து புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களும் வெடிகள் வெடித்த குப்பைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் சோ்ந்து சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குப்பை மேடாகக் காட்சியளித்தது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாநகரத்தை தூய்மைப்படுத்தும் வகையிலும், துப்புரவுத் தொழிலாளா்களின் சிரமத்தில் பங்கெடுக்கும் வகையிலும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் குப்பைகளை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குப்பைகளை அகற்றும் இயக்கத்தில் வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். மகாதீா், நகரச் செயலா் தீபக், தலைவா் இதயம் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலா் கே. முகமதலிஜின்னா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் புதுகை பாண்டியன், சிஐடியு மாவட்ட துணைச் செயலா் க. ரெத்தினவேல் உள்ளிட்டோரும் இதில் இணைந்து பணியாற்றினா்.