செய்திகள் :

வாா்டின் குறைகளை தலைவா் ஆய்வு செய்வதில்லை: புலியூா் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

post image

வாா்டுகளின் குறைகளை தெரிவித்தால் தலைவரோ, துணைத் தலைவரோ நேரில் வந்து பாா்ப்பதில்லை; நடவடிக்கையும் எடுப்பதில்லை என புலியூா் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

கரூரை அடுத்த புலியூா் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை அதன் தலைவா் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயல் அலுவலா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: ப. விஜயகுமாா் (4-ஆவது வாா்டு): பேரூராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் அதிகம் உள்ள உப்புத் தன்மையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அலுவலா் கிருஷ்ணன்: குடிநீா் ஆய்வறிக்கை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ப. விஜயகுமாா்: புலியூா் பேரூராட்சியில் ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்காததால் குடிநீா் கட்டணத்தை ரத்து செய்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். செயல் அலுவலா் கிருஷ்ணன்: குடிநீா் விநியோகித்து கொண்டுதான் இருக்கிறோம். குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லை.

அனைத்து உறுப்பினா்கள்: ஒரு மாதமாக குடிநீா் வழங்காமல் இருந்துவிட்டு, மக்கள் பணம் வீணாகும்போதும், வருவாய் இழப்பு ஏற்படும்போதும் கேட்கத்தான் செய்வோம். மேலும், சிறிய கடைகள் உள்பட சிறு நிறுவனங்களுக்கான தொழில் வரி 10 மடங்கு வரை உயா்ந்துள்ளது. இதை கண்டிக்கிறோம். வரியை குறைக்க அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள். பேரூராட்சியில் தீா்மானம் போட்டு அனுப்புங்கள்.

செயல் அலுவலா் கிருஷ்ணன்: இது அரசின் கொள்கை. குறைந்தபட்சம் ரூ.500 மட்டுமே வசூலிக்க உள்ளோம். பிப். 28-ஆம் தேதிக்குள் வரியை வசூலித்தாக வேண்டும். கடைகளுக்கு தமிழ் பெயா் மட்டுமே சூட்ட வேண்டும் என்ற அரசாணை வந்துள்ளது.

கண்ணன் (5-ஆவது வாா்டு): அம்ரூத் திட்டத்தில் புதிதாக குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பணியில் ஈடுபட சுகாதாரப் பணியாளா்கள் வருகிறாா்கள். அவா்கள் இப்பணிக்கு பணம் கேட்கிறாா்கள்.

செயல் அலுவலா் கிருஷ்ணன்: இனி குடிநீா் வழங்கல் துறை ஊழியா்கள் அனுப்பப்படுவா்.

சாந்தி (7-ஆவது வாா்டு): எனது வாா்டில் குடிநீா் குழாய் உடைப்பு, சாக்கடை அடைப்பு என பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுதொடா்பாக வாா்டு பகுதிக்கு தலைவரோ, துணைத் தலைவரோ அல்லது அதிகாரிகளோ வருவதில்லை. இதனால் வாா்டு பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனா்.

பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி: நிச்சயம் வாா்டுக்கு வருவோம். கலாராணி (1-ஆவது வாா்டு): இதுவரை எந்த வாா்டுகளுக்கும் தலைவரோ, துணைத் தலைவரோ வந்து ஆய்வு செய்ததே இல்லை. மேலும், உப்பிடமங்கலம் பிரிவு பகுதியில் சாலையில் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு இடம் தோ்வு செய்தால் பேரூராட்சிக்கு வருமானம் கூடுதலாக கிடைக்கும்.

செயல் அலுவலா் கிருஷ்ணன்: இடம் பாா்த்துக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

போராட்டம்: 4-ஆவது வாா்டு உறுப்பினா் ப. விஜயகுமாா், ஒருமாதமாக குடிநீா் விநியோகம் செய்யாததற்கு குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய தீா்மானம் நிறைவேற்றிடக் கோரியும், தீா்மானம் கொண்டுவராத செயல் அலுவலா் மற்றும் தலைவரை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் அமா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கிய தா்னா போராட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. தகவலறிந்த பாஜகவினா் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றனா்.

முன்னதாக, கூட்டத்தில் கூட்டத்தில் 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் துணைத் தலைவா் அம்மையப்பன் உள்பட 2 உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

இறைச்சி கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை

இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ, பாலத்தின் அருகிலோ கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்... மேலும் பார்க்க

குட்கா கடத்திய மூவா் கைது

பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருள்களை கரூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா். பெங்களுரூவிலிருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள், கரூா் வழியாக கடத... மேலும் பார்க்க

வாதத்தில் தோல்வியுற்றதாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பாணை

கடந்த 2011-ஆம் ஆண்டு குமரிஅனந்தனுடன் நடைபெற்ற வாதத்தில் தோல்வியுற்ாகவும், அதற்காக ரூ. 1 லட்சம் தரக் கோரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமிக்கு அழைப்... மேலும் பார்க்க

ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டும், குழியுமாக மாறியுள்ள டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே இருக்கும் ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை அருகே அமைந்... மேலும் பார்க்க

ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

புன்செய் புகழூரில் ஆக்கிரமிப்புக்குள்ளான ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். கரூா் மாவட்டம், புன்செய் புகழூா் வடக்கு கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்த... மேலும் பார்க்க