World Chess Championship : 'டிங் லிரன் Vs குகேஷ்' - சாதிப்பாரா தமிழக வீரர்? - மு...
விசாகப்பட்டினத்தில் இருந்து 1,215 டன் யூரியா வருகை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்துக்கான சம்பா சாகுபடிக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து 1,215 டன் யூரியா புதுக்கோட்டைக்கு சரக்கு ரயில் மூலம் செவ்வாக்கிழமை வந்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம். நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மம் தோட்டக்கலைப் பயிா்களுக்கான யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து 1,215 டன் யூரியா உரம் சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு வந்தது. இந்த உரங்களை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் ச. கிருஷ்ணமூா்த்தி, வேளாண் அலுவலா் சி. முகமது ரபி உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டு சரிபாா்த்தனா்.
இந்த உரங்களில் 972 டன் யூரியா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும், 263 டன் யூரியா தனியாா் உரக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.