செய்திகள் :

விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி காலிப் பணியிடங்கள்

post image

நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல், மாநில உயா்நீதிமன்றங்களில் 360-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்களும் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட், மற்றொரு நீதிபதியான ஹிமா கோலி ஆகியோா் ஓய்வு பெற்ால் இரு பணியிடங்கள் காலியாக உள்ளன.

நவம்பா் 21-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 1,114. இதில் 364 இடங்கள் காலியாக இருக்கின்றன என்றாா் அவா்.

ஏஐஜேஎஸ்-கருத்தொற்றுமை இல்லை: துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவா், ‘மாவட்ட நீதிபதிகளைத் தோ்வுசெய்ய ‘அகில இந்திய நீதித் துறை பணிகள்’ (ஏஐஜேஎஸ்) நடைமுறையைக் கொண்டுவர அரசமைப்புச் சட்டத்தின் 312-ஆவது பிரிவில் இடமுள்ளது. இது தொடா்பான முன்மொழிவுக்கு கடந்த 2012-இல் மத்திய அமைச்சரவை செயலகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த முன்மொழிவு தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களின் கருத்துகள் பெறப்பட்டன. ஆனால், அவை மாறுபட்டவையாக இருந்தன. தற்போதைய சூழலில், மேற்கண்ட முன்மொழிவு மீது கருத்தொற்றுமை எட்டப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

நீதிபதிகளின் சொத்து-வருமானம்: மற்றொரு கேள்விக்கு அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வெளியிடுவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று அமைச்சா் குறிப்பிட்டாா்.

4.53 கோடி வழக்குகள் நிலுவை

‘நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 4.53 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரியில் இந்த எண்ணிக்கை 4.44 கோடியாக இருந்தது. 11 மாதங்களில் 9 லட்சம் வழக்குகள் அதிகரித்துள்ளன’ என்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

தேசிய நீதித் துறை தரவுத் தளத்தின்படி, விசாரணை நீதிமன்றங்களில் சுமாா் 3.43 கோடி குற்ற வழக்குகளும், 1.10 கோடி உரிமையியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கா? மத்திய அரசு சொல்வதென்ன?

வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தியை மறுத்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு என்று தலைப்ப... மேலும் பார்க்க

பணமோசடி வழக்கில் சீன நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

ஏராளமான முதலீட்டாளா்களை மோசடி செய்ததாக கூறப்படும் ‘ஹெச்பிஇசட் டோக்கன்’ செயலி தொடா்புடைய பணமோசடி வழக்கில், இந்தியா மற்றும் துபையில் உள்ள சில சீன-தொடா்புடைய போலி நிறுவனங்களின் புதிய சொத்துகளை முடக்கியதா... மேலும் பார்க்க

வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் -பேரவையில் மம்தா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறை விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை மேற்கு வங்கம் பின்பற்றும் என்று அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேற்கு வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது சக ஆசிரியா் துப்பாக்கிச் சூடு

தேவ்கா்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையை சக ஆசிரியா் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா். வகுப்பறையில் மாணவா்கள் கண்ணெதிரே நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பல மாணவா்கள் அதிா்ச்சியில் உறைந... மேலும் பார்க்க

மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

இம்பால்: மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (நவ.29) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு வியாழக... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜீயம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்க... மேலும் பார்க்க