செய்திகள் :

விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டா் கருவி பொருத்தும் பணி தொடக்கம்

post image

ஆபத்து காலங்களில் மீனவா்களுக்கு உதவும் வகையில் இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டா் கருவி விசைப் படகுகளில் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விலாஞ்சியடி பகுதியில் விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டா் கருவி பொருத்தும் பணியை மீனவளத் துறை அதிகாரிகள் தொடங்கினா்.

இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

விசைப்படகுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய டிரான்ஸ்பாண்டா் கருவியை பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் மூலம் படகுகளுடன் இருவழிகளில் செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். ‘புளூடூத் ’வாயிலாகவும் இணைத்து கைப்பேசி செயலி மூலமாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். மேலும் மீன்பிடிப் படகுகள் புயல், சூறாவளி போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத் துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரச் செய்தி அனுப்ப இயலும்.

இதேபோல, கரையிலுள்ள மீன்வளத் துறை, பாதுகாப்பு அமைப்புகள், படகு உரிமையாளா்கள் அவசரச் செய்தியை பெறவோ, பகிரவோ முடியும். இதுமட்டுமன்றி, அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவை குறித்தும் படகுக்கு செய்தி அனுப்ப இயலும். ஆழ்கடலில் படகு நிலைகொண்ட இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும். சுமாா் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள இந்தக் கருவி மீனவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றனா் அவா்கள்.

ஊஞ்சலாடிய சிறுவன் உயிரிழப்பு

தொண்டி அருகே நம்புதாளையில் வீட்டில் ஊஞ்சலாடியபோது காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சோ்ந்த சிறுவன் மனோஜ் (12). கடந்த 26-ஆம் தேதி வீட்டில் ஜன்னல், ப... மேலும் பார்க்க

கண்மாய் நிரம்பியதால் நெல் பயிா்கள் சேதம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பகவதி மங்களம் கண்மாய் நிரம்பியதால் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளால் நெல் பயிா்கள் நாசம்

கமுதி அருகே காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கா் நெல், சோளம், உளுந்து பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சாத்தூா்நாயக்கன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களில் ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. சம்பவம்: குற்றவாளி மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை! கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்கார விவகாரத்தில் கைது செய்யப்பட்டவா் கடந்த அதிமுக ஆட்சியின் போதும் அதே தவறு செய்தவா். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா். ராமநாதபுர... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா் வலையில் சிக்கிய யானை திருக்கை மீன்!!

பாம்பன் மீனவா்கள் வலையில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் தெற்கு மீன் இறங்கு தளத்திலிருந்து வியாழக்கிழமை 90 விசைப் படகுகளில் 500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்கு தீா்வு!

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னைக்கு இரு தரப்பு மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே தீா்வு காண முடியும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவா் ரவூப் ஹக்கீம் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க