செய்திகள் :

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு

post image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

'முதல்வர் மு.க.ஸ்டாலினைஇன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன் வி.விஜய பிரபாகரன், இளைஞரணிச் செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

அதுபோது, பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'தேர்தல் விதிகளில் திருத்தம் மிகப்பெரும் அச்சுறுத்தல்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பின்னர் வெளியே செய்தியாளர்களுடன் பேசிய தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்,

'விஜயகாந்த் நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூரத்துக்கு நினைவு தின பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம்' என்று கூறினார்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்!

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச. 24) ஆஜராக வலியுறுத்தி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விச... மேலும் பார்க்க

8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறையே தொடரும்: அமைச்சர்

கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும், தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் எனவும் பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக: மு.க. ஸ்டாலின்

சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 23) குற்றம் சாட்டியுள்ளார்.அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், அயல்நாட்டு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி, குமரி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச. 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்... மேலும் பார்க்க

தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் த... மேலும் பார்க்க