செய்திகள் :

விஜயகாந்த் நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

post image

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனையேற்று பல தலைவா்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனா்.

முன்னதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாநிலத் தோ்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில், தேமுதிக நிா்வாகிகள் பலா் பங்கேற்கவுள்ளனா். நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 33 % அதிகம்: நாகையில் 1,187 மி.மீ. பதிவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 33 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக 1,187 மி.மீ. மழை பதிவுடன் நாகப்பட்டினம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் 1076 மி.மீ. மழை பெய்துள... மேலும் பார்க்க

‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டம்: தூத்துக்குடியில் நாளை தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச. 30-இல் தொடங்கி வைக்கவுள... மேலும் பார்க்க

கோரக்பூா் ராப்தி சாகா் ரயில் இன்று ரத்து

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூா் வரை இயக்கப்படும் ராப்தி சாகா் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொச்சுவேலியில் (திருவனந்தப... மேலும் பார்க்க

224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

பிஇஓ பதவி உயா்வுக்கு பழைய நடைமுறை: அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பதவி உயா்வுக்கு பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என அரசுக்கு, தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநில பொது... மேலும் பார்க்க

அபுதாபி விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் மீண்டும் தரையிறக்கம்

சென்னை, டிச. 28: சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. ... மேலும் பார்க்க