கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி
விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா
நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை ஓவியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜய்யைக் கைது செய்யவும் (Arrest vijay)’ எனக் கூறியிருந்தார். இதனைக் கண்ட த.வெ.க. தொண்டர்கள் ஓவியாவைக் கடுமையான வார்த்தைகளால் தாக்க, சில நிமிடங்களிலேயே அப்பதிவை நீக்கிவிட்டார்.
ஆனால், ஓவியாவின் பழைய பதிவுகளுக்குச் சென்ற விஜய் ரசிகர்கள் அவரை ஆபாசமாகத் திட்டி வருகின்றனர். இவற்றை ஸ்க்ரீன் ஷாட் (screen shot) எடுத்த ஓவியா ஒவ்வொன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிக்க: கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்