செய்திகள் :

விஜய் தலைவர் அல்ல, தமிழகத்தின் நம்பிக்கை: பிரசாந்த் கிஷோர்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெறும் தலைவர் அல்ல, தமிழகத்தின் நம்பிக்கை என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதையும் படிக்க : தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரசாந்த் கிஷோர் வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

”தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. உங்களின் வெற்றிக்கு நீங்கள் செய்யும் பணியே காரணம். உங்கள் தலைவரும் தொண்டர்களும் செய்யும் பணிகளால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

பிறகு நான் ஏன் வந்திருக்கிறேன் எனக் கேட்கலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன்.

2021 தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்துக்கான வேலை செய்த பிறகு நான் ஓய்வுபெற்றுவிட்டேன். இங்கு தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை. நான் எனது சகோதரர், நண்பருமான விஜய்க்கு ஆலோசனை கூறவரவில்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கிறார். அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். தவெக அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்.

35 ஆண்டுகால அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார் விஜய், அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வந்துள்ளேன். எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்தாண்டு தவெக வென்றால், நான் மீண்டும் இங்கு வந்து தமிழில் நன்றி கூறி உரையாற்றுவேன். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் தோனி மிகவும் பிரபலமானவர். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன் தவெக வெற்றி பெற்றால், அவரைவிட நான் பிரபலமாவேன்” எனத் தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக

தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் மறுச... மேலும் பார்க்க

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வை... மேலும் பார்க்க

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை முதல் கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 27) முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப். 26ல் தென்தமிழக மாவட்டங்கள்... மேலும் பார்க்க