பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
விஜய் 69 படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் 69-வது படத்தின் பெயர் ’ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.