சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
விஜய் - 69 முதல் போஸ்டர் எப்போது?
நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் முதல் போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் அதிதி ஷங்கரின் பைரவம் டீசர்!
படத்தின் அறிவிப்புக்குப் பின் வேறு எந்த அப்டேட்களும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு படத்தின் முதல் தோற்ற போஸ்டர் அல்லது பெயர் அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய் - 69 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ஜன. 26 ஆம் தேதி வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.