செய்திகள் :

விடாத ஊழியர்கள்.. மீண்டும் பறந்த மெயில்.. பணிந்தது கோவை ஐடி நிறுவனம்..!

post image

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. கோவையில் உள்ள இரண்டு கிளைகளில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

கோவை ஐடி ஊழியர்கள்

இந்நிலையில் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களது நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக கூறி ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளனர்.

ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை முறையாக சொல்லவில்லை. மேலும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் குறித்தும் முறையான தகவல் சொல்லவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “இந்த மாதம் வரை முழுமையாக வேலை செய்துள்ளோம்.

கோவை ஐடி ஊழியர்கள்

 எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் உள்ளன. பணி அனுபவ சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே மற்ற நிறுவனங்களில் முயற்சி செய்ய முடியும். அதனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறினர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று கோவை தொழிலாளர் நல ஆணையம் அலுவலகம் சென்று முறையிட்டனர். பிரச்னை தீவிரமடைந்த காரணத்தால் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு ஒரு மெயில் அனுப்பியது. அதில், “அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும்.

மெயில்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு கிராஜுவிட்டி, ஜனவரி மாதம் வரையிலான தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்தும் முறையாக பின்பற்றப்படும். ஊழியர்களுக்கு உரிய காரணங்களுடன் பணி விலகலுக்கான ஆணை மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் வருமான வரி தொடர்பான ஃபார்ம் 16 இன்னும் 30-45 நாள்களில் வழங்கப்படும்.” என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் அந்த நிறுவனம் ஊழியர்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. இதை ஊழியர்களும் ஏற்று கொண்டனர்.

கோவை ஐடி ஊழியர்கள்

கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றாவிடின் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!" - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மாநில அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி இருக்கிறார். சமீபத்தில் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பெற்று அதுகுறித்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' - அதிமுக அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளிய... மேலும் பார்க்க

`கைவிலங்கிட்ட அமெரிக்கா, வாய் திறக்காத இந்தியா' - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்; நாடாளுமன்றத்தில் அமளி!

அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய இந்தியர்களைப் பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் கொண்டுவந்து சேர்த்தது, சி17 அமெரிக்க ராணுவ விமானம்.இதில் 104 இந்தியர்கள் வந்திறங்கி... மேலும் பார்க்க

கழுகார்: தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர் `டு' கிராக்கி காட்டும் சமூகத் தலைகள் வரை..!

தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர்!”“உத்தரவு போட்ட ‘ஷாக்’ அமைச்சர்...தமிழ்மொழியைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘மான்செஸ்டர்’ மாவட்டத்தில் பிரமாண்ட பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளைச்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்!

திருப்பத்தூர் மாவட்டம், குட்டிகாம்ப வட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ரெட்டியூரில் கிராம சாலையையொட்டி அமைந்திருக்கிறது அந்தக் கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும், சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்... மேலும் பார்க்க