தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
விடாமுயற்சி வசூலை முறியடிக்கும் டிராகன்?
அமெரிக்காவில் டிராகன் திரைப்படம் விடாமுயற்சியின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், முதல் மூன்று நாள்களிலேயே உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
இதையும் படிக்க: மாஸ்க் முதல் போஸ்டர் அறிவிப்பு!
இந்த நிலையில், அமெரிக்காவில் டிராகன் திரைப்படம் இதுவரை 6.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வார முடிவிற்குள் 1 மில்லியன் டாலர் (ரூ. 8.7 கோடி) வரை வசூலிக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அமெரிக்காவில் 8 லட்சம் டாலர்கள் (ரூ. 6 கோடி) மட்டுமே வசூலித்துள்ளதால் அங்கு டிராகன் திரைப்படம் விடாமுயற்சியின் வசூலை முறியடிக்கலாம் என்றே தெரிகிறது.