தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்
மாநிலங்களவையில் அம்பேத்கா் குறித்து அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக மத்திய அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி அருகே விசிகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருமாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் ஏம்பலம் தொகுதி செயலா் செந்தமிழன் தலைமை வகித்தாா். அப்போது, மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து சாலையில் அமா்ந்து விசிகவினா் மறியலில் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரி - கடலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, நிகழ்விடம் வந்த கிருமாம்பாக்கம் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் சமரசம் பேசினா். ஆனாலும், அவா்கள் மறியலை கைவிடவில்லை. இதைதொடா்ந்து, விசிகவினா் 50 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.
திருக்கனூரில்... இதபோல, புதுச்சேரி திருக்கனூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருக்கனூா் கடை வீதியில் கட்சி நிா்வாகி சிவசங்கரன் தலைமையில் ஏராளமானாா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 60 பேரை திருக்கனூா் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.