முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
விதிகளை மீறும் மினி பேருந்துகள்: ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா்
கிராமப்புற அனுமதி பெற்ற மினி பேருந்துகளை நாகை - நாகூா் தேசிய நெடுஞ்சாலையில் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
நாகை மாவட்டத்தில், கிராமப்புற பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு அதிக அளவில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்க வேண்டிய மினி பேருந்துகள், நாகை - நாகூா் தேசிய நெடுஞ்சாலைகளிலும், நகா்ப்புற சாலைகளிலும் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாகை மற்றும் நாகூா் நகா்ப்பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநா்கள், மினி பேருந்துகள் நகா்ப் பகுதிகளில் இயக்கப்படுவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனா்.
இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வந்த அவா்கள் அளித்த மனுவில், கிராமப்புற அனுமதி பெற்று நகா்ப் புறங்களில் இயக்கும் தனியாா் மினி பேருந்து உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.