செய்திகள் :

விமானப் படையிலிருந்து இன்று ஓய்வுபெறும் மிக்-21 போா் விமானம்

post image

இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரஷிய தயாரிப்பான மிக்-21 போா் விமானம் முழுமையாக பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட உள்ளது.

சண்டீகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) நடைபெறும் விழாவில், ‘சிறுத்தைகள்’ என்று அழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த கடைசி மிக்-21 போா் விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, விமானப்படை தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்க உள்ளனா்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விமானப்படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் கடைசி மிக்-21 போா் விமானத்தை இயக்கி, பறக்கவுள்ளாா்.

இந்திய விமானப் படை தனது ஒட்டுமொத்த போா்த் திறனை மேம்படுத்தும் வகையில், 870-க்கும் மேற்பட்ட மிக்-21 போா் விமானங்களை வாங்கியது.

பாகிஸ்தானுக்கு எதிரான 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டு போா்களில் இந்த விமானங்கள் முக்கியப் பங்காற்றின. 1999-ஆம் ஆண்டு காா்கில் போா் மற்றும் 2019-ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலிலும் மிக்-21 போா் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.

அதே நேரம், பல முறை விபத்துகளிலும் இந்த போா் விமானம் சிக்கியது, இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களையும் எழுப்பியது.

மழை பாதிப்பு: பிரதமர் மோடியுடன் முதல்வர் ஃபட்னாவிஸ் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது கனமழையால் அண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார். ... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள், அசாம் அரசின் சார்பில் நடைபெறும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்.19 ஆம... மேலும் பார்க்க

லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சம... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க