பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு
விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 206 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது.
இதையும் படிக்க: ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி
விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அசத்தல்
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் பில் சால்ட் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், பில் சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். டிம் டேவிட் 23 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 20 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.