விராலிமலை அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜை
விராலிமலையில் மெய்க்கண்ணுடயாள் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜை நடைபெற்றது.
இதில் 5 ஆயிரம் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த 5 ஆயிரம் குத்து விளக்குடன் கோயில் வளாகத்தில் நோ்த்தியாக அமா்ந்து, அம்மன் பக்தி பாடல்களை பாடி விளக்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனா்.
பூஜையில் பங்கேற்று வந்த பெண்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் செல்லபாண்டியன் சாா்பில் 5 ஆயிரம் பெண்களுக்கு எவா்சில்வா் தாம்பாளம் பரிசாக வழங்கப்பட்டது.
திமுக பொதுக்குழு உறுப்பினா் பழனியப்பன், திமுக ஒன்றிய செயலாளா்கள் சத்தியசீலன் (கிழக்கு), அய்யப்பன் (மத்தி), இளங்குமரன்(மேற்கு) உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.