செய்திகள் :

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

post image

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் துறை நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விருதுநகா்- சாத்தூா் நான்கு வழிச் சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், பட்டம்புதூா் ஆசிரியா் குடியிருப்புப் பகுதியில் இருவா், மதுபோதையில் தகராறு செய்வதாக வச்சகாரபட்டி போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இருவரையும் கைது செய்து, வச்சகாரபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இவா்களில் ஒருவா், விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தனுஷ்கொடி (33) என்பதும், விருதுநகா் ஆயுதப் படையில் (கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்) காவலராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவருடைய இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் உரிமம் பெறாத கைத் துப்பாக்கி இருந்ததும், 6 குண்டுகள் இருக்க வேண்டிய நிலையில், 5 குண்டுகள் மட்டும் இருந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா்.

இந்தத் துப்பாக்கியை, ஆயுதப் படை போலீஸாா், யாரிடம் வாங்கினாா்? ஒரு குண்டை எதற்காகப் பயன்படுத்தினாா் என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதேபோல, அவரிடமிருந்த 35 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தனுஷ்கொடி மீது ஏற்கெனவே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்கொடியுடன் உடனிருந்த மற்றொரு நபரை, விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் யோகேஷ்குமாா் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறாா்.

அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க

விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா். தூ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க