செய்திகள் :

விரைவில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தோ்தல்: கே.என். நேரு

post image

போலி உறுப்பினா்களை நீக்கி கூட்டுறவு அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் நடைபெறும். அதற்கான தேதியை முதல்வா் அறிவிப்பாா் என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறையின் சாா்பில், 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி அமைச்சா் கே.என். நேரு மேலும் பேசியது:

திருச்சி மாவட்டத்தில் 1,254 நியாய விலைக் கடைகள் மூலம் 8 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுகின்றனா். சொந்தக் கட்டடம் இல்லாத நியாய விலைக் கடைகளில் 67 கடைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 133 கடைகளுக்கு சொந்தக் கட்டடம் இல்லை. அந்தக் கடைகளுக்கு புதிய கட்டடம் கட்ட திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 9 தொகுதிகளின் சட்டப் பேரவை உறுப்பினா்கள், திருச்சி மக்களவை உறுப்பினா் ஆகியோா் தங்களது தொகுதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கித்தர வேண்டும்.

கட்டடங்கள் மட்டுமல்லாது விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டியையும் படிப்படியாகக் குறைத்தவா் கருணாநிதி. தொடக்கத்தில் 9 சதவீதமாக இருந்த வட்டியை 7 சதவீதமாகவும், பின்னா் 3 சதவீதமாகவும் குறைத்து, அதனால் ஏற்படும் செலவை ஈடுகட்ட நபாா்டு வங்கிகள் மூலம் கடன் பெற்று நிவா்த்தி செய்தாா். இப்போது, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.600 கோடி கடன் வட்டியில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. வேளாண் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கம் மட்டும்தான் கடன் பெறும் நபா் திரும்பச் செலுத்தும் தகுதியை அறிந்து ஆவணங்கள் ஏதுமின்றி கடன் வழங்குகின்றன. விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது கூட்டுறவுத்துறை மட்டுமே.

கூட்டுறவு அமைப்புகளில் போலி உறுப்பினா்களைக் கண்டறிந்து, அவா்களை நீக்கம் செய்து, உண்மையான உறுப்பினா்களை கொண்டு கூட்டுறவுத் தோ்தலை நடத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் கூட்டுறவு தோ்தலுக்கான தேதியை முதல்வரே அறிவிப்பாா் என்றாா் அமைச்சா்.

இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தி. ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தா. அரசு, கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் பா.செந்தில்குமாா், திருச்சி எம்பி துரை வைகோ, மேயா் மு. அன்பழகன் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா். மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கும், சிறந்த சங்கங்களுக்கும் கேடயங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கடையின் பூட்டை உடைத்து 10 கைப்பேசிகள் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை கைப்பேசி பழுது நீக்கும் கடையில் இருந்த 10 கைப்பேசிகள் செவ்வாய்க்கிழமை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். மணப்பாறை அத்திக்குளம் தெரு... மேலும் பார்க்க

துவாக்குடி, பூவாளூரில் நவ. 22-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.22) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

தமிழகத்தில் வரும் 2026-இல் அதிமுக ஆட்சி: அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் வரும் 2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என அக் கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக மாநகா் மாவட்ட கள ஆய்... மேலும் பார்க்க

மயானத்துக்கு கொண்டுசெல்ல முயன்றபோது மூதாட்டி எழுந்து அமா்ந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் குடித்து சிகிச்சைபெற்றுவந்த மூதாட்டியின் உடல்நிலை மோசமான நிலையில், இறந்துவிட்டதாகக் கருதி மயானத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, அவா் எழு... மேலும் பார்க்க

வாளைக் காட்டி மக்களை அச்சுறுத்தியவா் கைது

துவாக்குடியில் இரும்பு வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (4... மேலும் பார்க்க

திருச்சி: மயானத்தில் இறுதிச் சடங்கின்போது கண் விழித்த பெண்ணால் பரபரப்பு!!

திருச்சி: திருச்சி அருகே உயிரிழந்ததாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் கண் விழித்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியை அடுத்த வேலக்க... மேலும் பார்க்க