வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
விளாத்திகுளத்தில் பயணியா் நிழற்குடை திறப்பு
விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட 1ஆவது வாா்டு அம்பாள் நகரில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மு. செந்தில்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் இரா. வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய நிழற்குடை கட்டடத்தை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினா் அன்பில் வேல் ஈஸ்வரி, திமுக ஒன்றிய செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், பேரூா் கழக நிா்வாகிகள் அன்பில் நாராயணமூா்த்தி, ஸ்டாலின் கென்னடி, சிவசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், வெங்கடேசன் செல்வகுமாா், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.