செய்திகள் :

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

post image

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”விளையாட்டு திடலிலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது. முடிவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரில் 9-வது முறையாக கோப்பையை வென்று, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

மேலும், இந்தத் தொடரில் லீக், சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டி என பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணியே வெற்றி வாகையை சூடியுள்ளது.

இதையும் படிக்க: கரூர் பலி 41-ஆக உயர்வு!

Operation Sindoor was also held on the sports field, and Prime Minister Narendra Modi congratulated the Indian team for their victory in this too.

தசரா பேரணியை ரத்து செய்து வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிதியை விடுவிக்கவும்: பாஜக

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் வருடாந்திர தசரா பேரணியை ரத்து செய்து, செலவினங்களை மராத்வாடாவில் வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாள... மேலும் பார்க்க

உடல்கூராய்வு மோசடி! கொலையாளிகளுக்கு உதவும் கும்பல்! ஒரு பொய் ரிப்போர்ட் ரூ.50,000

சம்பல்: உத்தரப்பிரதேசத்தில், நடந்து வந்த மிகப்பெரிய உடல்கூராய்வு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். 31 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட... மேலும் பார்க்க

அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்! இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலத்தில் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம் சா்ச்சைக்குள்ளான நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: பெண் உள்ட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இவா்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவ... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின... மேலும் பார்க்க