செய்திகள் :

விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாகவே ஏா் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஸ்டாா் ஏா், அலையன்ஸ் ஏா் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானங்கள் அவசர தரையிறக்கம், வழித்தடம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிலையும் விமானத்தில் பயணிக்க பயணிகள் அச்சப்படும் சூழலும் உருவாகியுள்ளது. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமே விடுக்கப்படும் இந்த மிரட்டல்கள் புரளி என்பது கண்டறியப்படுகிறது.

இதையும் படிக்க |பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சத்தீஸ்கரை சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து மும்பை, சிங்கப்பூரில் இருந்து தில்லி, சிங்கப்பூரில் இருந்து புணே, பாலியில் இருந்து தில்லி, தில்லியில் இருந்து பிராங்பேர்ட் உள்ளிட்ட 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் பதவி இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின்

சேலம்: துணை முதல்வர் பதவி என்பது இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு எனவும், இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த... மேலும் பார்க்க

பிரான்ஸ் கல்விச் சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர் விருது" பெற்ற 55 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது... மேலும் பார்க்க

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சேலம்: எனக்கு தங்கை துளசிமதி உந்துசக்தியாக உள்ளாா். அவரின் சாதனைகள், பதக்கங்களை பாா்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என துணை முதல்வா் உதயநிதி ஸ... மேலும் பார்க்க

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பத்த... மேலும் பார்க்க

இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று(அக். 20) 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:வடதமிழக... மேலும் பார்க்க

துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!

மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (... மேலும் பார்க்க