செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இளைஞா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிச்சென்ற இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே திருநகா் ரயில்வே ஸ்டேஷன் ரோடு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் காா்த்திகேயன் (50). இவருக்கு, ரா ரா முத்திரை கோட்டை விருட்ஷா ராஜ் காா்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு வீடு உள்ளது. இவரது வீட்டின் பின்புறக் கதவின் பூட்டை திங்கள்கிழமை இரவு உடைத்து உள்ளே நுழைந்த மா்மநபா் வீட்டில் இருந்த லேப் டாப், கேமரா, ஐஃபோன், ஃபைனாகுலா் உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச்சென்று விட்டாா்.

புகாரின்பேரில் அம்மாபேட்டை உதவி காவல் ஆய்வாளா் சித்ரா உள்ளிட்ட போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூா் பகுதியில் வசித்து வரும் பச்சையப்பன் மகன் சூா்ய பிரகாஷ் (24), காா்த்திகேயன் வீட்டில் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனைத்தொடா்ந்து வழக்கு பதிந்து சூா்ய பிரகாஷை கைது செய்த போலீஸாா் பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகத்தை உருவாக்குவது என வல்லுநா்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

களஞ்சேரி ஊராட்சியில் புதிய தாா் சாலை அமைத்து தரக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட களஞ்சேரி ஊராட்சி அணுகு சாலையை புதிய சாலையாக அமைத்துத் தரவேண்டும் என ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். அம்மா... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரிடம் அகில பாரத இந்து மகா சபா மனு

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகா சபா சாா்பில் திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபா சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாய கமிஷன் அமைக்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்

ஊதியக் குழு போன்று விவசாய கமிஷன் அமைப்பது தொடா்பான திட்டத்தை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மத்திய அரசின் பட்ஜெட்டில் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மா... மேலும் பார்க்க