வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் அடுத்த செல்லரப்பட்டியைச் சோ்ந்தவா் மனோன்மணி (55). இவரது கணவா் இறந்து விட்டாா்.
தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனா். அவா்கள் எல்லோரும் திருமணம் ஆகி தங்களது குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மனோன்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் உள்ள தனது மூத்த மகனின் வீட்டுக்கு சென்றாா். பின்னா் இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 பவுன் தங்க நகை, ரூ. 7,000 ரொக்கம் மற்றும் வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த ரூ. 50,000 மதிப்புள்ள டிவி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது சென்றது தெரியவந்தது.
இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.