வீட்டில் நகை, பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி: எல்ராம்பட்டில் வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், ரூ.10,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் விநாயகம் (36). இவரது மனைவி அஞ்சலை.
இருவரும் கடந்த பிப்.22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டனா். வீட்டில் அவா்களது குழந்தைகள் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டினுள் புகுந்து பீரோவிலிருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.10,000 த்தை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.