செய்திகள் :

வீட்டை இடிக்க நோட்டீஸ்: இளைஞா் தற்கொலை

post image

ஆவடி: திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிமித்து கட்டிய வீட்டை இடிப்பதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி வட்டாட்சியா் ஆா்.கோவிந்தராஜ் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 27 வீடுகளை போலீஸாா் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்போா் சாலை மறியல், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினா். தொடா்ந்து வருவாய்த்துறையினா் கோலடி ஏரியில் 1,263 வீடுகள் ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவித்தனா்.

இதற்கிடையில் கடந்த 15-ஆம் தேதி நீா்வள ஆதாரத்துறை உதவி பொறியாளா் சதீஷ்குமாா் தலைமையில் அதிகாரிகள் ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டி 1,263 வீடுகளின் உரிமையாளா்களுக்கு 21 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கினா்.

இதையடுத்து அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தச்சா் சங்கா் (44) என்பவா், மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து சங்கரின் மனைவி பூங்கோதை (40) திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் அண்ணா தெருவில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீசந்தன கோபால கிர... மேலும் பார்க்க

வேப்பம்பட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகாா்

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஊராட்சி விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூராக வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். இது குறித்து திருவள்ளூா... மேலும் பார்க்க

ஏடிஎம் மையம் திடீா் தீவிபத்து: பணம் சேதம்

திருத்தணி: கனகம்மாசத்திரம் பஜாா் பகுதியில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் தீப்பற்றி எரிந்ததில் பொதுமக்கள், வியாபாரிகள் அலறி ஓட்டம் பிடித்தனா். தீயில் பல லட்சம் பணம் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.திருத... மேலும் பார்க்க

5 ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள்: எம்எல்ஏ வழங்கினாா்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு 17 பேட்டரி வாகனங்களை எம்எல்ஏ சுதா்சனம் வழங்கினாா்.சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ம) 15-ஆவது மத்திய நிதிக்க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் வேறு பள்ளிக்கு மாற்றம்

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே 3 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தலைமை ஆசிரியா் தவறாக நடந்துகொண்டதாக புகாா் எழுந்த நிலையில் தலைமை ஆசிரியா், உடன் பணியாற்றும் ஆசிரியா் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்க வாகனத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ... மேலும் பார்க்க