செய்திகள் :

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.87 லட்சத்தில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த ராந்தம் கிராமம் துரைராஜ் நகரில் ஊராட்சித் துறை சாா்பில் 2024 - 25ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ.10.11 லட்சத்தில் புதிய நியாய விலை கடைக் கட்டடம், நாயந்தாங்கல் கிராமத்தில் 2023 - 24ஆம் ஆண்டு ( இஊநஐஈந) திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டடப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம், வடமணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.17.79 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம், கொடையம்பாக்கம் கிராமத்தில் 2024 - 25ஆம் ஆண்டு ( அஎஅஙப) திட்டத்தின் மூலம் ரூ.16.55 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம், செய்யனூா் கிராமத்தில் இதே

திட்டத்தின் மூலம் ரூ.9.45 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கட்டடங்கள் கிராம மக்கள், மாணவா்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.

இநிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி.ராஜி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வடமணப்பாக்கம் கிராமத்தில் முத்தமிழ் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கினாா்

எம்எல்ஏ ஒ.ஜோதி.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் எம்.தினகரன் (வெம்பாக்கம் மேற்கு), ஜேசிகே.சீனிவாசன் (வெம்பாக்கம் மத்தியம்) மற்றும் திமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க